சீனாவில் உருவாகி உலகம் முழுக்க பரவிய கொரோனா வைரஸ் அடுத்தடுத்து உருமாற்றம் பெற்று வருகிறது.
காமா, பீட்டா, டெல்டா, டெல்டா பிளஸ் என்று இதுவரை பல்வேறு வடிவங்களுக்கு கொரோனா வைரஸ் மாறிவிட்டது. இதில் டெல்டா பிளஸ் வகை கொரோனா உலகம் முழுவதும் மாபெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி அதிரவைத்தது.
இந்த நிலையில் ஆப்ரிக்க நாடுகள் மூலம் கொரோனா வைரஸ் ஒமைக்ரான் என்ற புதிய வடிவத்திற்கு வந்தது.
இந்த வடிவமும் பிஏ, பிஏ-1, பி.ஏ-2, பி.ஏ-3 என்று 4 வகையாக உருமாற்றம் அடைந்தது. அதோடு மின்னல் வேகத்திலும் பரவியது.
இந்த நிலையில் தற்போது தென்கொரியா, சீனா, ஹாங்காங் உள்பட சில நாடுகளில் ஒமைக்ரான் வைரசின் புதிய வடிவம் காட்டுத்தீ போல பரவி வருகிறது.
ஒமைக்ரான் பி.ஏ-2 வகை வடிவம் பரவுவதால் இந்த நாடுகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது.
இதன் தொடர்ச்சியாக மற்ற நாடுகளிலும் ஒமைக்ரான் பி.ஏ-2 பரவி அடுத்த அலையை உருவாக்கி விடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இது தொடர்பாக மருத்துவ நிபுணர்கள் அடுத்தடுத்த ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதுவரை நிபுணர்கள் நடத்திய ஆய்வில் ஒமைக்ரான் புதிய வடிவம் காரணமாக அடுத்த அலை வரலாம். அல்லது வராமலும் போகலாம் என்று தெரியவந்துள்ளது.
இதனால் கொரோனாவின் அடுத்த நிலை பற்றி மருத்துவ நிபுணர்கள் எந்த முடிவுக்கும் வர முடியாத நிலையில் திணறியபடி உள்ளனர்.
#WorldNews
Delta Plus strains spread in Africa !!
Leave a comment