செய்திகள்
ஆப்கானில் தொடரும் கொலைகள் – சர்வதேசம் பார்த்துக்கொண்டிருப்பதேன்?
ஆப்கானில் மனித உரிமை ஆா்வலா் உள்பட 4 பெண்கள் படுகொலை செயப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடக்கு ஆப்கானிஸ்தானிலுள்ள ஒரு வீட்டில் மனித உரிமை ஆா்வலா் உள்பட 4 பெண்கள் படுகொலை செய்யப்பட்டதாகவும் அதில் தொடபுடையதாக சந்தேகிக்கப்படும் இருவர் கைது செய்யப்பட்டதாகவும் தலிபான்களின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆப்கானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய நாளிலிருந்து கொலைகள்,குண்டுவெடிப்புக்கள் என அங்கு மனித சாவுகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது. இதனால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளார்கள்.
ஆனால் இக்கொலைகள் தொடர்பில் சர்வதேசம் இன்னும் ஏன் பார்த்துக்கொண்டிப்பது என்பது புரியாத புதிராகவே உள்ளதென சர்வதேச ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#world
You must be logged in to post a comment Login