ஆப்கானிஸ்தானின் பாடசாலையில் குண்டென்று வெடித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் மதம் சார்ந்த பாடசாலை ஒன்றில் குண்டு வெடித்துள்ளது.
அதில் 7பேர் சாவடைந்ததோடு 15 பேர் படுகாயம் அடைந்ததாக அந்நாட்டு ஊடகமொன்று செய்தி வெளியீட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் வெளியேறியதை அடுத்து தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினார்கள்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டில் கோஸ்ட் மாகாணத்தில் மதம் சார்ந்த ஒரு பள்ளிக்கூடம் ஒன்று இயங்கி வந்த நிலையில் இவ் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை காபூலில் மசூதியில் நடாத்தப்படட குண்டுவெடிப்பு சம்பவத்தில்குண்டுத்தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
1 Comment