fire
உலகம்செய்திகள்

எதேன்ஸ் நகரை எட்டியது காட்டுத் தீ! – பல நாடுகள், நகரம் எங்கும் நெருப்பு

Share

எதேன்ஸ் நகரை எட்டியது காட்டுத் தீ! – பல நாடுகள், நகரம் எங்கும் நெருப்பு

கிறீஸ் நாட்டின் பல பகுதிகளில் கட்டுக்கடங்காமல் பரவிவருகின்ற காட்டுத்தீ தலைநகர் எதேன்ஸின் புறநகரங்களை எட்டியுள்ளது. நகரின் வடக்கே வானில் பெரும் கரும்புகை மண்டலம் எழுவதையும் தீப்பிளம்புகள் தெரிவதையும் கிறீஸ் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பிவருகின்றன. நகரில் அடுத்தடுத்து மின் துண்டிப்பும் ஏற்பட்டுள்ளது.

தண்ணீர் குண்டுகளை வீசுகின்ற இருபது தீயணைப்பு விமானங்களும் பல நூற்றுக்கணக்கான வீரர்களும் தீயை அணைப்பதற்குப் போராடி வருகின்றனர். அமெரிக்கா, பிரான்ஸ் உட்பட வெளிநாடுகள் பலவும் அப்பணிகளில் இணைந்துள்ளன. தீ நெருங்கும் பகுதிகளில் இருந்து வெளியேறுமாறு மக்கள் கேட்கப்பட்டுள்ளனர். இதனால் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர். தீயணைப்பு பணியில் ஈடுபட்டிருந்த வீரர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். நகரின் வர்த்தக சங்கத் தலைவர் தனது களஞ்சியம் ஒன்றில் மூச்சிழந்த நிலையில் மீட்கப்பட்டிருக்கிறார். டசின் கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.

வெப்ப அனல் கிறிஸ் நாட்டை “எளிதில் தீப்பற்றும் பொருளாக” (powder keg) மாற்றியிருக்கிறது என்று அந் நாட்டின் பிரதமர் நிலைமையை வர்ணித்திருக்கிறார். கிறீஸ் நாட்டில் ஒலிம்பிக் போட்டிகளின் பிறப்பிடமாகிய தொன்மை மிகுந்த ஒலிம்பியா (Olympia) நகரம் மற்றும் ஏவியா தீவு (island of Evia) உட்பட 158 இடங்களில் காட்டுத்தீ மூண்டிருக்கிறது. தொடர்ந்து வீசி வருகின்ற அனல் காற்று தீயை மேலும் தீவிரமாக்கி வருகிறது. கடந்த வாரம் முழுவதும் நாட்டில் 40 செல்ஸியஸ் அளவுக்கு மேல் (107 degrees Fahrenheit) வெப்பம் பதிவாகி இருக்கிறது. “பருவநிலை மாற்றத்தின் நிஜமான விளைவு இது” என்று கிறீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடகிஸ் (Kyriakos Mitsotakis) தெரிவித்திருக்கிறார்.

கிறீஸ் நாட்டைப் போன்று இத்தாலி உட்பட ஜரோப்பாவின் வேறு பல பகுதிகளிலும் கடும் வெப்பமும் காட்டுத் தீயும் ஏற்பட்டுள்ளது. அண்டை நாடான துருக்கி அதன் வரலாற்றில் கண்டிராத பெரும் காட்டுத்தீயால் சூழப்பட்டுள்ளது. துருக்கியின் தெற்கு மத்தியதரை கரையோரங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர். இதுவரை எட்டுப் பேர் உயிரிழந்துள்ளனர். அனல் மின் நிலையம் (Thermal Power Plant) அமைந்துள்ள பகுதியை தீ நெருங்கியுள்ளதால் அங்கிருந்து பல்லாயிரக்கணக்கானோர் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். ஐரோப்பிய ஒன்றியம் தீயைக் கட்டுப்படுத்துவதற்கான அவசர உதவிகளை துருக்கிக்கு வழங்கியுள்ளது.

“டிக்ஸி தீ” (Dixie Fire) என்று அழைக்கப்படும் பெரும் காட்டுத் தீ அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் பேரழிவை ஏற்படுத்திவருகிறது. அங்கு ஒரு லட்சத்து 75 ஆயிரம் ஹெக்ரேயர் பரப்பளவுக்கு காடுகள், தாவர இனங்கள் அழிந்துள்ளன.

குமாரதாஸன்.
பாரிஸ்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
24 6719ef7b673a7
அரசியல்செய்திகள்

டயானா கமகே கடவுச்சீட்டு விசா வழக்கு: மேலதிக சாட்சியங்களுக்காக பிப். 16க்கு ஒத்திவைப்பு!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே மீது கடவுச்சீட்டு மற்றும் விசாக்கள் தொடர்பாகக் குற்றப் புலனாய்வுத்...

Waqf Board Donates Rs 10 Million 1170x658 1
இலங்கைசெய்திகள்

அனர்த்தத்தில் சேதமடைந்த மதத் தலங்களைப் புனரமைக்க: வக்ஃப் சபை 10 மில்லியன் நிதி நன்கொடை!

கடந்த காலத்தில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் சேதமடைந்த மதஸ்தலங்களை மீண்டும் கட்டியெழுப்பும் பணிகளுக்காக, வக்ஃப் சபையினால்...

Untitled
அரசியல்இலங்கைசெய்திகள்

கிராம உத்தியோகத்தர்களுக்கு எதிரான பொதுவான குற்றச்சாட்டுகள் நிறுத்தப்பட வேண்டும் – இம்ரான் மகரூப் கோரிக்கை!

நாட்டிலுள்ள ஒட்டுமொத்த கிராம உத்தியோகத்தர்களுக்கும் மனஅழுத்தம் ஏற்படும் வகையில் செய்திகள் வெளியிடப்படுவதை நிறுத்த வேண்டும் என்றும்,...

24 66c584aba0b91
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வெல்லவாய – தனமல்வில விபத்து: ஒருவர் பலி, 4 பேர் காயம்!

வெல்லவாய – தனமல்வில வீதியில் உள்ள தெல்லுல்லப் பகுதியில் இன்று (டிசம்பர் 15) ஏற்பட்ட கோர...