ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி இடைக்கால அரசு நிறுவியுள்ள நிலையில், தற்போது ஆப்கானிஸ்தானுக்கு 20 மில்லியன் நிதியுதவி ஐக்கிய நாடுகள் சபையால் வழங்கப்படவுள்ளது.
போர் மற்றும் வறுமையால் பாதிக்கப்படுகின்ற ஆப்கானிஸ்தான் மக்களுக்கு உதவுவதற்கு ஐ.நாவின் மத்திய அவசரகால உதவி நிதியில் குறித்த தொகை வழங்கப்படவுள்ளது என ஐ.நா. தெரிவித்துள்ளது.
ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரஸ் தலைமையில் நடைபெற்ற
உயா்நிலை நன்கொடையாளா்கள் மாநாட்டில் ஐக்கிய நாடுகள் சபையால் இந்த வேண்டுகோள் முன்வைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பல ஆண்டு காலமாக பஞ்சம் மற்றும் வறுமையை எதிர்கொண்ட ஆப்கான் மக்கள் அண்மைய போர் நடவடிக்கை காரணமாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு கடும் பஞ்சம் ஏற்பட வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுகின்றன,
இந்த நிலையில், ஐ.நா. அகதிகள் முகாமையின் தலைவா் காபூலுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார். இந்த ஆண்டில் மட்டும் வீடுகளை இழந்து வெளியேறிய 5 லட்சம் மக்கள் உட்பட 35 லட்சம் மக்களின் நிலைமை மற்றும் அவா்களுக்குத் தேவைப்படும் உதவிகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அவர் ஆய்வு செய்ய உள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
Leave a comment