தென் அமெரிக்கா நாடான பெரு நாட்டில் பயணிகள் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
லோர்டோவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு ஒரே கிராமத்தைச் சேர்ந்த சுமார் 80 பேர் ஹூவல்லாகா ஆற்றின் வழியாக படகு மூலம் சொந்த ஊர் சென்றுள்ளனர்.
அப்போது திடீரென மற்றொரு படகு மோதியதில் படகு ஆற்றில் கவிழ்ந்தது. இதில் அனைவரும் ஆற்றில் தத்தளித்த நிலையில் குழந்தைகள், பெண்கள் உள்பட 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
Leave a comment