வெப்ப அலையில் சிக்கி 15,700 பேர் உயிாிழப்பு!
ஐரோப்பாவில் வெப்ப அலை காரணமாக, 15 ஆயிரத்து 700 பேர் உயிரிழந்துள்ளதாக உலக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உலக வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வறட்சி, வெள்ளம், வெப்ப அலைகள் காரணமாக இந்தியா உட்பட பல நாடுகளை கடுமையாக பாதித்துள்ளதுடன், பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
இந்நிலையில், கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, உலக சராசரி வெப்பநிலை கடந்த ஆண்டு 1.15 டிகிரி செல்ஷியஸாக பதிவாகியுள்ளது.
இதற்கமைய, ஐரோப்பாவில், கோடை காலத்தில், ஸ்பெயினில் 4,600 ஜெர்மனியில் 4,500, பிரிட்டனில் 2,800, பிரான்சில் 2,800 போர்ச்சுக்கலில் 1,000 உட்பட மொத்தம் 15 ஆயிரத்து, 700 பேர், வெப்ப அலையால் உயிரிழந்துள்ளனர்.
#world
Leave a comment