சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டதுடன், வீடுகள் மற்றும் கட்டடங்கள் சேதமாக்கப்பட்டுள்ளன. பீதியடைந்த குடியிருப்பாளர்கள் வீதிகளில் நிற்கின்றனர். ஈக்வடார் மற்றும் பெருவில் ஏற்பட்ட நிலநடுக்கத்திலேயே இந்நிலைமை ஏற்பட்டுள்ளது.
ஈக்வடாரின் கடலோர குவாஸ் பகுதியில் சனிக்கிழமையன்று 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு தெரிவித்துள்ளது. மூன்று மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் மெட்ரோ பகுதியிலேயே பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இலங்கையிலும் இரண்டு இடங்களில் நிலநடுக்கம் இன்று (19) அதிகாலை பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.