1380 கோடி ரஸ்ய சொத்துக்கள் முடக்கம்! – ஐரோப்பிய ஒன்றியம் தெரிவிப்பு

1732315 eu1

உக்ரைன் மற்றும் ரஸ்யா இடையில் போர் தொடங்கி தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது.

இரு தரப்பிலும் அதிக அளவிலான உயிர்சேதங்கள் ஏற்பட்டுள்ளன. உக்ரைனில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர்.

உக்ரைன் மீதான போரை கைவிடுமாறு உலக நாடுகள் வலியுறுத்தி வந்த நிலையில், பல்வேறு கட்டங்களாக நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்தன. இதற்கிடையே, ரஸ்யா மீது சர்வதேச நாடுகள் வரலாறு காணாத பொருளாதார தடைகளை விதித்துள்ளன.

இந்நிலையில், அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த நாடுகளில் ரஸ்யாவின் சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் ரஸ்யா, உக்ரைன் போர் ஏற்பட்ட பிறகு 1,380 கோடி டொலர் மதிப்பிலான ரஷிய சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

#world

Exit mobile version