tamilni 153 scaled
உலகம்செய்திகள்

பாகிஸ்தானில் வன்முறைகளுக்கு மத்தியில் நடைபெறும் பொதுத் தேர்தல்

Share

பாகிஸ்தானில் வன்முறைகளுக்கு மத்தியில் நடைபெறும் பொதுத் தேர்தல்

பாகிஸ்தானின் 12வது பொதுத் தேர்தலின் வாக்குப்பதிவு இன்று (08.2.2024) ஆரம்பமாக்கியுள்ளது.

வன்முறை, அரசியல் நிச்சயமற்ற தன்மை, பொருளாதார நெருக்கடி போன்ற சவால்களுக்கு மத்தியில் பாகிஸ்தானில் இன்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகின்றது.

நாடு முழுதும் 90,582 வாக்களிப்பு நிலையங்களில் பலத்த பாதுகாப்புடன் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

128 மில்லியன் வாக்காளர்கள் இவ்வருட பொதுத் தேர்தலுக்கு வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், பலுசிஸ்தான் மாகாணத்தில் நேற்று (07) தேர்தலுக்கு ஒருநாளே இருந்த வேளையில் இரண்டு குண்டுவெடிப்புகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதில் 28 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.​

இரண்டு தேர்தல் வேட்பாளர்களின் அலுவலகங்களுக்கு அருகாமையில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வைக்கப்பட்டிருந்த குண்டுகள் வெடித்ததாகக் கூறப்படுகிறது.

பாகிஸ்தானில் தேர்தல் அறிவித்த காலப்பகுதியில் இருந்தே அவ்வப்போது வன்முறைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...