மெக்சிகோவில் ஆயுதக்குழுக் களால் 11பேர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
மெக்சிகோவில் இரு ஆயுதக்குழுக்கள் மோதிக்கொண்டதில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெக்சிகோ நாட்டில் குவானாஜுவாட்டோ நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சிலாவோ பகுதியில் இடம்பெற்ற முதற் சம்பவத்தில் ஆயுதம் ஏந்திய நபர்கள் வீடு மீது தாக்குதல் நடத்தியதில் அறுவர் கொல்லப்பட்டுள்ளனர்.
அத்துடன் 4 பேர் காயமடைந்துள்ளனர்.
இதேவேளை, மற்றொரு வீட்டில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் 14 வயது சிறுமி உட்பட ஒரே குடும்பத்தின் 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
#WORLD
Leave a comment