ஒமிக்ரோன் தொற்றுக் காரணமாக பயணத்திற்காக தடை விதிக்கப்பட்ட 11 நாடுகள் மீதான தடையை பிரித்தானியா நீக்கியுள்ளது.
இன்று முதல் இத்தடையை நீக்குவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஒமிக்ரோன் தொற்றுப் பரவியதால் அங்கோலா, போட்ஸ்வானா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட 11 நாடுகளைச் சேர்ந்தவர்கள் பிரிட்டன் வருவதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
அத்துடன் குறித்த நாடுகள் சிவப்புப் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் ஒமிக்ரோன் சமூகப் பரவலாக இல்லாததால் 11 நாடுகளைச் சேர்ந்தவர்கள் வருவதற்கான தடை நீக்கப்படுவதாக பிரித்தானியா சுகாதாரத்துறைச் செயலாளர் சாஜித் ஜாவித் தெரிவித்துள்ளார்.
#WorldNews
Leave a comment