tamilni 477 scaled
இந்தியாஉலகம்செய்திகள்

49 வயது பெண்ணை திருமணம் செய்த 103 வயது சுதந்திர போராட்ட வீரர்

Share

49 வயது பெண்ணை திருமணம் செய்த 103 வயது சுதந்திர போராட்ட வீரர்

103 வயது சுதந்திர போராட்ட வீரர் ஒருவர் தனது வயதில் பாதிக்கு குறைவான பெண்ணை மணந்து செய்திகளில் இடம்பிடித்துள்ளார்.

தனிமையை தாங்க முடியாமல் 49 வயதான Firoz Jahan என்பவரை திருமணம் செய்து கொண்டதாக அவர் கூறினார்.

ஆனால் அந்த முதியவருக்கு இது மூன்றாவது திருமணம். இந்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது.

போபாலின் இத்வாரா பகுதியைச் சேர்ந்த 103 வயதான சுதந்திரப் போராட்ட வீரர் ஹபீப் நாசர் (Habib Nazar), 49 வயதான ஃபிரோஸ் ஜஹானை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்.

இது நாசரின் மூன்றாவது திருமணம். இரண்டாவது மனைவி இறந்த பிறகு, தனியாக இருந்த அவர், மூன்றாவது திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார்.

ஃபிரோஸ் ஜஹானை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டுள்ளார், அனால் இந்த சம்பவம் இந்த ஆண்டு ஜனவரியில் தான் வெளிச்சத்திற்கு வந்தது.

இந்நிலையில், ஃபிரோஸ் ஜஹானுடன் நாசரின் நிக்காஹ் வீடியோ கிளிப் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

ஹபீப் நாசரின் முதல் திருமணம் மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் நடந்தது. முதல் மனைவி இறந்த பிறகு, உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் மூன்றாவது திருமணம் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடந்தது.

49 வயதான ஃபிரோஸ் ஜஹானுக்கு இது இரண்டாவது திருமணமாகும். கணவர் இறந்துவிட்டதால் தனியாக வசித்து வந்துள்ளார்.

மறுபுறம், 103 வயதான சுதந்திரப் போராட்ட வீரர் ஹபீப் நாசரை கவனித்துக் கொள்ள யாரும் இல்லாததால் அவரை திருமணம் செய்து கொண்டதாக ஃபிரோஸ் ஜஹான் தெரிவித்தார்.

கணவர் நாசர் நலமுடன் இருப்பதாகவும், எந்த வித மருத்துவ பிரச்சனையும் இல்லை என்றும் அவர் கூறினார்.

தன்னை யாரும் நாசரை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தவில்லை என்று அவர் தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...