மனைவியை கட்டையால் அடித்தே கொன்ற இந்திய வம்சாவளியினர்
லண்டனில், விளையாட பயன்படுத்தும் மட்டை ஒன்றால் தன் மனைவியை அடித்துக்கொன்ற இந்திய வம்சாவளியினர் ஒருவர், தன் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
பொலிஸ் நிலையம் சென்ற முதியவர்
கடந்த மே மாதம் 2ஆம் திகதி, கிழக்கு லண்டனிலுள்ள Romford என்னுமிடத்தில் அமைந்துள்ள பொலிஸ் நிலையத்துக்குச் சென்ற Tarsame Singh (79), தான் தன் மனைவியை அடித்துக்கொன்றுவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
உடனடியாக பொலிசார் கிழக்கு லண்டனிலுள்ள Hornchurch என்னுமிடத்தில் அமைந்திருக்கும் அவரது வீட்டுக்கு விரைந்துள்ளனர்.
அங்கே சிங்குடைய மனைவியான மாயா தேவி ( Maya Devi) இரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்துள்ளார். அவரைக் கொல்ல சிங் பயன்படுத்திய மட்டையும் அவர் அருகிலேயே கிடந்துள்ளது.
தம்பதியரின் மூன்று பிள்ளைகளும் அதிர்ச்சியில் உறைந்துபோன நிலையில், எதற்காக தன் மனைவியை அடித்துக்கொன்றார் என சிங் கூறவேயில்லை.
குற்றத்தை ஒப்புக்கொண்ட முதியவர்
இந்நிலையில், திங்கட்கிழமை, அதாவது, ஜூலை 31ஆம் திகதி, தான் தன் மனைவியை மட்டையால் அடித்துக்கொன்ற குற்றத்தை ஒப்புக்கொண்டார் சிங்.
செப்டம்பர் மாதம் 29ஆம் திகதி சிங் தன் மனைவி மாயா தேவியைக் கொலை செய்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
Leave a comment