பிரித்தானியாவின் கடலோர நகரம் ஒன்றில் மக்கள் கொத்தாக வெளியேற்றம்!
பிரித்தானியாவின் டர்ஹாம் கவுண்டியில் குடும்பங்கள் பல இரவோடு இரவாக வெளியேற்றப்பட்டதுடன் வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடலோர நகரமான டர்ஹாமில் பெரும் குழப்பம் ஏற்பட்டதுடன், பத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. Hartlepool பகுதியை சேர்ந்த சில குடும்பங்கள் அவசரமாக தங்கள் குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அதிகாலை 2.20 மணியளவில் வாகனங்கள் தீப்பற்றியது தொடர்பாக கிளீவ்லேண்ட் பொலிசாருக்கு முதலில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவயிடத்திற்கு தீயணைப்பு மற்றும் மீட்பு குழிவினர் களமிறக்கப்பட்டனர்.
வாகனங்கள் நெருப்பு கோளமானதை பல குடியிருப்பாளர்கள் நேரில் பார்த்துள்ளனர். குடியிருப்பாளர் ஒருவர் தெரிவிக்கையில், எங்கள் தெருவிலும் பக்கத்து தெருக்களிலும் பத்து கார்கள் வரையில் எரிக்கப்பட்டன, கூச்சல் குழப்பமாகவே உள்ளது, வாகன உரிமையாளரை எழுப்ப முயன்றோம் என தெரிவித்துள்ளார்.
ஆனால் கிளீவ்லேண்ட் பொலிசார் தெரிவிக்கையில், மிக குறைவான எண்ணிக்கையிலான குடும்பங்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவயிடத்தில் களமிறக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், கலிடோனியன் சாலை, பேடன் தெரு, ஷ்ரூஸ்பரி தெரு, லான்ஸ்டவுன் சாலை, ஆஸ்போர்ன் சாலை மற்றும் பிரிங்க்பர்ன் சாலை ஆகிய பகுதிகளை மக்கள் தவிர்க்குமாறு அதிகாரிகள் தரப்பில் அறிவுறுத்தப்பட்டனர்.
இந்த விவகாரம் தொடர்பில் தகவல் தெரியவரும் பொதுமக்கள் அதிகாரிகளுக்கு உதவ முன்வர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Leave a comment