afghasthan
உலகம்செய்திகள்

பள்ளியில் குண்டுவெடிப்பு! – 19 மாணவர்கள் பலி

Share

ஆப்கானிஸ்தானின் வடக்கு சமங்கன் மாகாணத்தில் அய்பக் நகரில் உள்ள மதரசா பள்ளியில் திடீரென்று குண்டு வெடித்தது. அங்கு தொழுகை நடந்து கொண்டிருந்தபோது குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது.

இதில் 19 மாணவர்கள் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். பலியானவர்களில் பெரும்பாலானோர் சிறுவர்கள்.

இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா- கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அனைத்து ஆப்கானிஸ்தான் குழந்தைகளும் பயமின்றி பள்ளிக்கு செல்ல உரிமை உண்டு என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இத் தாக்குதலுக்கு உடனடியாக எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. கடந்த 2021ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை ஏற்ற பிறகு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக மசூதிகள், மக்கள் கூடும் மார்க்கெட் ஆகிய பகுதிகளில் தாக்குதல் நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

#World

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
l78020250411143138 1296x700 1
செய்திகள்உலகம்

சீனா-அமெரிக்கா வர்த்தகப் பதற்றம் தணிப்பு: முக்கிய உலோகங்கள் மீதான ஏற்றுமதி தடை தற்காலிக நீக்கம் – கிராஃபைட் கட்டுப்பாடுகளும் நிறுத்தம்!

சீனா, அமெரிக்காவுக்கான முக்கிய உலோகங்கள் மீதான தனது ஏற்றுமதித் தடையை தற்காலிகமாக நீக்கியுள்ளது. இந்த நடவடிக்கை,...

1755693983076533 0
இலங்கைசெய்திகள்

மட்டக்களப்பு ஐஸ் போதைப்பொருள் வழக்கு: முன்னாள் மேயரின் கணவர், பிள்ளையானின் மொழிபெயர்ப்பாளர் பொலிஸ் தடுப்புக் காவலில்!

மட்டக்களப்பு நகரில் ஐஸ் (ICE) போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட, மட்டக்களப்பு...

MediaFile 8 1
செய்திகள்இலங்கை

சிறையில் ஆடம்பர வாழ்க்கை: போதைப்பொருள் பாவனை, மசாஜ் காணொளி விவகாரம் – விசாரணை ஆரம்பம்!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி எனக் கூறப்படும் கைதி ஒருவர் சிறைச்சாலைக்குள் கையடக்கத் தொலைபேசியைப் பயன்படுத்தி ஆடம்பரமாகவும் வசதியாகவும்...