நீங்கள் வெற்றி பெறவேண்டும் என்று பிரித்தானியா விரும்புகிறது: இஸ்ரேல் சென்றுள்ள பிரித்தானிய பிரதமர்

நீங்கள் வெற்றி பெறவேண்டும் என்று பிரித்தானியா விரும்புகிறது: இஸ்ரேல் சென்றுள்ள பிரித்தானிய பிரதமர்

இஸ்ரேல் சென்றுள்ள பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக், இஸ்ரேல் வெற்றி பெறவேண்டும் என பிரித்தானியா விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் நகரில் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகுவும் சந்தித்துப் பேசினர்.

பின்னர் இருவரும் இணைந்து ஊடகவியலாளர்களை சந்தித்த நிலையில், இஸ்ரேல் பிரதமர், பிரித்தானியா தங்களுக்கு அளித்துவரும் ஆதரவுக்காக நன்றி தெரிவித்துக்கொண்டார்.

80 ஆண்டுகளுக்கு முன், இரண்டாம் உலகப்போரின்போது, இருள் சூழ்ந்த ஒரு காலகட்டத்தை (The Darkest Hour), பிரித்தானியா சந்தித்தபோது, நாகரீக உலகம் உங்களுக்கு ஆதரவாக நின்றது. இப்போது, இப்போது நாங்கள் அதேபோன்றதொரு சூழலில் நிற்கிறோம், உங்கள் ஆதரவு எங்களுக்கு வேண்டும், நாம் இணைந்து வெற்றிபெறவேண்டும் என்றார் நெத்தன்யாகு.

நீங்கள் வெற்றி பெறவேண்டும் என்று பிரித்தானியா விரும்புகிறது
அவரைத் தொடர்ந்து பேசிய பிரித்தானிய பிரதமர் ரிஷி, இது உங்களுக்கு இருளான காலகட்டம் என்று கூறினீர்கள், அப்படியானால், உங்கள் கஷ்டத்தின்போது உங்கள் நண்பராக, உங்களுடன் ஒன்றிணைந்து, உங்களுடன் நிற்பதில் நான் பெருமையடைகிறேன்.

நாங்கள் உங்கள் மக்களுடன் நிற்போம், நீங்கள் வெற்றி பெறவேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என்றார் ரிஷி.

The Darkest Hour என்பது, இரண்டாம் உலகப்போரின்போது, 1940ஆம் ஆண்டின் மத்தியப் பகுதி முதல், 1941ஆம் ஆண்டின் மத்தியப் பகுதி வரையிலான காலகட்டத்தைக் குறிக்க பயன்படுத்தப்பட்ட ஒரு பதம் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version