துருக்கியில் வெள்ளம் – 17 பேர் உயிரிழப்பு
துருக்கியின் வடமேற்கு பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.
துருக்கியில் கடந்த சில நாள்களாக ஏற்பட்டுள்ள கனமழை காரணமாகவே இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கருங்கடல் பகுதியை ஒட்டிய பார்டின், காஸ்டாமோனு, சினோப் மற்றும் சாம்சன் மகாணங்களிலேயே இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வீடுகள் மற்றும் பாலங்கள் அடித்துச்செல்லப்பட்டுள்ளதுடன் நகரங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளன.
வெள்ளப்பெருக்கு காரணமாக வீட்டுக்கூரைகளில் நின்று தவிப்போரை ஹெலி கொப்டர்கள் மூலம் மீட்புப்பணியினர் மீட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment