உலகம்செய்திகள்

திருட வந்த வீட்டில் டீ போட்டுக் குடித்து கூலாக சென்ற திருடர்கள்!

23 64eb04cadeedf
Share

திருட வந்த வீட்டில் டீ போட்டுக் குடித்து கூலாக சென்ற திருடர்கள்!

தமிழகத்தில், வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை திருடிச் சென்ற கொள்ளையர்கள், திருடிய வீட்டில் டீ போட்டுக் குடித்துக் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், நல்லவன்பாளையம் அருகே சமுத்திரம் என்ற கிராமத்தைச் சேர்ந்த தம்பதியினர் அசோகன் மற்றும் சித்ரா.

இவர்கள் கடந்த 10 நாள்களுக்கு முன்பு உறவினர் ஒருவர் வீட்டின் திருமணத்திற்கு சென்றுள்ளனர் திருமணத்தை முடித்து வீட்டிற்கு வந்த போது வீட்டின் பூட்டு உடைந்திருந்தது.

பின்பு, வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது வீட்டின் பொருள்கள் உடைந்து, சிதறி கிடந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் பீரோவில் இருந்த 17 பவுன் நகை காணாமல் போயுள்ளது.

இதனால், அதிர்ச்சியடைந்த தம்பதியினர் திருவண்ணாமலை மாவட்ட தாலுக்கா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

டீ போட்டுக் குடித்து சென்ற திருடர்கள்
பின்னர், தகவலறிந்த பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும், கைரேகை நிபுணர்கள் வந்து கைரேகைகளை சேகரித்து ஆய்வு செய்த போது, வீட்டில் திருட வந்த திருடர்கள் டீ போட்டுக் குடித்துச் சென்றது தெரியவந்தது

இது தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். அண்மையில், இந்த பகுதிக்கு அருகில் உள்ள திருமண மண்டபத்தில் இருந்து குத்து விளக்கு, ஸ்பீக்கர் திருடு போனது குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
25 3
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்மைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என...

22 5
இலங்கைசெய்திகள்

யாழில் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயம்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயமடைந்த...

21 6
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியின் உள்நோக்கம் என்ன.. சிறீதரன் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள 5,700 ஏக்கருக்கும் அதிகமான தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சுவீகரிப்பதற்காக...

24 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற பேரம் பேசும் அரசாங்கம்! நாடாளுமன்றில் பகிரங்க குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள பல உறுப்பினர்களுடன் அரசு மில்லியன் கணக்கான ரூபா பேரம்...