தாய்வானின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஹூவாலியன் நகரில் நேற்றயதினம் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்று மத்திய தரைக்கடல் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.0 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.
தரைமட்டத்தில் இருந்து 28 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கத்தின் மையம் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் பல்வேறு பகுதிகளில் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. இருப்பினும், உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment