ஜப்பானின் வடமேற்கு கடலோர பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்றய தினம் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது ரிக்டர் அளவுகோலில் 6.1 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை.
அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படும் பசிபிக் எரிமலை வளையத்துள் ஜப்பான் அமைந்துள்ளதால் உலகின் 90% நிலநடுக்கங்களும் 81% பெரிய நிலநடுக்கங்களும் இப்பகுதியிலேயே ஏற்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a comment