உக்ரைன் உடையில் ரஸ்யா வீரர்கள் விண்வெளியில்!!

20 1223 Voyager Station

 

ரஷியாவை சேர்ந்த 3 விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தை நேற்று சென்றடைந்தனர்.

ரஷியாவின் டேனிஸ் மெத்வேவெவ், செர்ஜி கோர்சாகோவ், ஒலெக் ஆர்டெமிகேவ் ஆகிய விண்வெளி வீரர்கள் சோயுஸ் எம்.எஸ்.21 ராக்கெட்டில் புறப்பட்டனர்.

கஜகஸ்தானில் உள்ள பைசோனூர் ஏவு தளத்தில் இருந்து ஏவப்பட்ட இந்த ராக்கெட் வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்தது.

சர்வதேச விண்வெளி நிலையத்துக்குள் சென்றடைந்த ரஷிய வீரர்கள் உக்ரைன் நாட்டு தேசிய கொடி நிறமான மஞ்சள் மற்றும் நீலநிறத்தில் ஆடை அணிந்து இருந்தனர்.

இது குறித்து ஆர்ட்டெ மிகேவ் கூறும்போது, ‘ஒவ்வொரு குழுவினரும் தங்களது சொந்த விருப்பத்தை தேர்வு செய்கிறார்கள்.

ஒரு வண்ணத்தை தேர்ந்தெடுப்பது எங்கள் முறை. நாங்கள் நிறைய மஞ்சள் பொருட்களை குவித்து இருக்கிறோம். அதனால்தான் மஞ்சள் நிறம் அணிய வேண்டியதாயிற்று’ என்றார்.
#WorldNews

Russian soldiers in space dressed in Ukraine !!

 

Exit mobile version