3 15 scaled
உலகம்செய்திகள்

அடுக்குமாடிக் குடியிருப்பொன்றில் பயங்கர தீ: குழந்தை உட்பட 73 பேர் வரை பலி

Share

அடுக்குமாடிக் குடியிருப்பொன்றில் பயங்கர தீ: குழந்தை உட்பட 73 பேர் வரை பலி

தென்னாப்பிரிக்காவில், அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் பற்றிய தீயில், குழந்தை உட்பட 73 பேர் வரை உயிரிழந்துள்ள விடயம் பெரும் துயரத்தை உருவாக்கியுள்ளது.

தென்னாப்பிரிக்காவின் மிகப்பெரிய நகரமான ஜோஹன்னஸ்பர்கில் அமைந்துள்ள ஐந்து மாடிக் கட்டிடம் ஒன்றில் தீப்பற்றியுள்ளது. தரைத்தளத்தில் தீப்பற்றி ஆக்ரோஷமாக எரியத் துவங்கியதால் ஏராளமானோர் அந்தக் கட்டிடத்திலிருந்து வெளியேற முடியாமல் உள்ளேயே சிக்கியுள்ளார்கள்.

தீயணைப்பு வீரர்கள் ஒரு பக்கம் வேகவேகமாக மக்களைக் காப்பாற்றும் பணியிலும், மறுபக்கம் தீயை அணைக்கும் பணியிலும் இறங்கியுள்ளார்கள்.

அந்தக் கட்டிடத்தில் புலம்பெயர்ந்தோர் பலர் தங்கியிருந்ததாகக் கூறப்படும் நிலையில், ஏழு சிறுவர்கள், அவர்களில் ஒரு வயது குழந்தை ஒன்று உட்பட, 73 பேர் வரை பலியாகியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அவர்களில் சிலர், தீயிலிருந்து தப்ப ஜன்னல்கள் வழியாக குதித்ததில் உயிரிழந்துள்ளார்கள்.

மேலும், தீயில் 52 பேர் காயமடைந்துள்ள நிலையில், காயமடைந்தவர்களும், புகையால் பாதிக்கப்பட்டவர்களும் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள்.

அந்த கட்டிடத்தில் சுமார் 200 பேர் வரை இருந்ததாக உள்ளூர் மக்கள் கூறியுள்ளார்கள். இந்த கோர சம்பவம் தென்னாப்பிரிக்காவில் பெரும் துயரத்தை உருவாக்கியுள்ளது.

Share
தொடர்புடையது
MediaFile 5
உலகம்செய்திகள்

நுளம்புகள் இல்லாத கடைசி இடமாக கருதப்பட்ட ஐஸ்லாந்தில் முதல் முறை நுளம்பு கண்டுபிடிப்பு!

பூமியில் நுளம்புகள் முற்றிலும் இல்லாத இரண்டு இடங்களாக ஐஸ்லாந்து மற்றும் அண்டார்டிகா மட்டுமே கருதப்பட்டு வந்தது....

images 5 2
செய்திகள்இலங்கை

ஏற்றுமதித் துறை ஸ்திரமான வளர்ச்சி: 9 மாதங்களில் $12.98 பில்லியன் வருவாய் – EDB அறிக்கை!

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை (EDB) வெளியிட்டுள்ள தகவலின்படி, 2025 ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான...

25 68fa28324343d
செய்திகள்இலங்கை

பாதாள உலகக் குற்றவாளி பெக்கோ சமனுக்குச் சொந்தமான ₹8 கோடி மதிப்புள்ள சொகுசுப் பேருந்துகள் பறிமுதல்!

பாதாள உலகக் குற்றவாளியான பெக்கோ சமனுக்குச் சொந்தமான 8 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான 2...

25 68fa2cc1432fd
இலங்கைசெய்திகள்

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

முன்மொழியப்பட்ட தேசிய கல்வி சீர்திருத்தங்களுக்கான வரைவு எனக் கூறி சமூக ஊடகங்களில் பரவி வரும் போலி...