மெலனியா ட்ரம்ப் ஆவணப்பட இயக்குநர் பிரட் ரட்னர்: எப்ஸ்டீனுடன் இருக்கும் புகைப்படங்களால் சர்ச்சை!

cb028b50 ff55 11f0 9972 d3f265c101c6

மெலனியா ட்ரம்ப் குறித்த புதிய ஆவணப்படமான ‘Melania: 20 Days to History’ வெளியாகி வரும் நிலையில், அதன் இயக்குநரான பிரட் ரட்னர் (Brett Ratner), மறைந்த பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீனுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

ரஷ் ஹவர’ மற்றும் எக்ஸ்-மென் போன்ற படங்களை இயக்கிய பிரட் ரட்னர், ஒரு சோபாவில் ஜெப்ரி எப்ஸ்டீனுக்கு அருகில் அமர்ந்திருப்பதையும், அடையாளம் மறைக்கப்பட்ட ஒரு இளம் பெண்ணைக் கட்டிப்பிடித்திருப்பதையும் அந்தப் புகைப்படங்கள் காட்டுகின்றன.

இந்தப் புகைப்படங்களில், எப்ஸ்டீனுக்காகப் பெண்களைக் கடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு 2022-இல் சிறையில் உயிர்மாய்ப்பு செய்துகொண்ட பிரெஞ்சு மொடலிங் ஏஜென்ட் ஜீன்-லூக் புருனலும் இடம்பெற்றுள்ளார்.

2017-இல் #MeToo இயக்கத்தின் போது எழுந்த பாலியல் அத்துமீறல் புகார்களால் திரையுலகை விட்டு ஒதுங்கியிருந்த ரட்னர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கியுள்ள முதல் படம் இதுவாகும்.

2025 ஜனவரியில் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் பதவியேற்பதற்கு முந்தைய 20 நாட்களில் மெலனியாவின் வாழ்க்கையைப் பதிவு செய்வதாக இந்தப் படம் அமைந்துள்ளது.

படம் வெளியான அதே நாளில் அமெரிக்க நீதித்துறையால் இந்தப் புகைப்படங்கள் வெளியிடப்பட்டமை, படத்தின் நம்பகத்தன்மை மற்றும் இயக்குநரின் கடந்தகாலம் குறித்த விவாதங்களை மீண்டும் ஒருமுறை கிளப்பியுள்ளது.

 

 

Exit mobile version