23 64ee8985180f6
உலகம்செய்திகள்

பிரிகோஜின் விமான விபத்து குறித்து ரஷ்யா விசாரிக்காது

Share

பிரிகோஜின் விமான விபத்து குறித்து ரஷ்யா விசாரிக்காது

தற்போதைய சூழலில் சர்வதேச விதிகளின் கீழ் வாக்னர் தலைவர் பிரிகோஜின் விமான விபத்து குறித்து ரஷ்யா விசாரிக்காது என பிரேசிலின் விமானப் போக்குவரத்து ஆணையத்துக்கு ரஷ்யா தகவல் அளித்துள்ளது.

வாக்னர் கூலிப்படை தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் உட்பட 10 பேர்கள் பிரேசிலில் தயாரிக்கப்பட்ட எம்ப்ரேயர் விமானம் கடந்த வாரம் மாஸ்கோவின் வடக்கே விபத்துக்குள்ளானதில் இறந்தனர்.

ரஷ்ய ராணுவ நிர்வாகத்திற்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்ட 2 மாதங்களுக்கு பிறகு எவ்ஜெனி பிரிகோஜின் விமான விபத்தில் பலியாகியுள்ளார். 1999ல் ரஷ்யாவின் ஆட்சி பொறுப்புக்கு வந்த விளாடிமிர் புடினுக்கு இந்த ஆயுத கிளர்ச்சியானது மிகப்பெரிய சவாலை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் விசாரணைக்கு உதவ ரஷ்யா தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டால், உதவ தயார் என பிரேசிலின் CENIPA அறிவித்திருந்தது. ஆனால் இதுவரை அந்த அழைப்புக்கு மறுப்பு தெரிவிக்காத ரஷ்யா, தற்போது விசாரணை முன்னெடுக்காது என அறிவித்துள்ளது.

ஆனால் பிரிகோஜின் இறப்பில் அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகள் பல சந்தேகம் எழுப்பியுள்ள நிலையில், ரஷ்யா வெளிப்படையாக விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என சில முன்னாள் புலனாய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

விபத்தில் சிக்கிய எம்ப்ரேயர் விமானமானது பாதுகாப்பு அம்சங்கள் கொண்டது என்றே கூறப்படுகிறது. இருப்பினும் தொடர்புடைய விமான விபத்தில் எந்த வகையிலும் ரஷ்யா ஈடுபடவில்லை என்றே புடின் தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும், தொடர்புடைய விமானமானது மாஸ்கோவில் இருந்து உள்ளூர் நகரமொன்றில் புறப்பட்ட நிலையில் விபத்தில் சிக்கியுள்ளதால், அது சர்வதேச விதிகளுக்கு கட்டுப்பட தேவையிருக்காது என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...