கனமழையால் பரிதாபமாக பலியான ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்!
இந்திய மாநிலம் உத்தரகாண்ட்டில் சுவர் இடிந்து விழுந்ததில் 2 சிறுவர், சிறுமி பரிதாபமாக பலியாகினர்.
உத்தரகாண்ட் மாநிலம் மரோடா கிராமத்தில் நேற்று இரவு கனமழை பெய்துள்ளது. இதனால் பிரவின் தாஸ் என்பவரது வீட்டின் பின்பக்க சுவர் இடிந்து விழுந்தது.
துரதிர்ஷ்டவசமாக இரண்டு பிள்ளைகள் சுவர் இடிபாடுகளுக்குள் சிக்கினர். இதுகுறித்து தகவல் அறிந்த பேரிடர் மீட்பு படை சம்பவ இடத்திற்கு விரைந்தது.
பின்னர் குறித்த சினேகா (12), ரன்வீர் (10) ஆகிய இருவரும் மீட்கப்பட்டு காவல்துறையினரால் ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே குறித்த சிறுவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதற்கிடையில் பிள்ளைகளின் தாத்தாவான பிரவின் தாஸ் (55) சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த விடயங்களை தெரிவித்த மாநில பேரிடர் மீட்பு படை அதிகாரி விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
இச்சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் மயூர் தீட்சித் கூறுகையில், ‘பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்து, சம்பவத்தில் எங்கள் வருத்தத்தை தெரிவித்தோம். மேலும் இறந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களும் தலா 4 லட்சம் நிவாரணத் தொகையை வழங்கினோம்’ என தெரிவித்தார்.
Leave a comment