கொரோனா வைரஸ் நீண்ட காலத்திற்கு பரவும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தின் இயக்குனர் பூனம் கேத்ரபால் சிங் நேற்றய தினம் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், கொரோனாவுக்கு எதிரான பாதுகாப்பு அம்சம் உலகளவில் குறைவாகவே காணப்படுகிறது.
தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள், தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோருக்கு எதிர்காலத்தில் தொற்று தாக்கத்துக்கு வாய்ப்பு குறைவு.
எனினும், கொரோனா தொற்று ஒழிந்து போவதற்கான வாய்ப்பு இல்லை. எனவே பெரும்பாலான மக்களுக்கு தொற்று பரவ வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் நீண்டகாலத்துக்கு தொடர்ந்து பரவும் எனவும் தடுப்பூசி மற்றும் முந்தைய தொற்று பாதிப்பு ஆகியவைதான் கொரோனா நீண்ட காலத்துக்கு தொற்று நோயாக இருக்குமா,இல்லையா என்பதை தீர்மானிக்கும் காரணிகளாக அமையும் என்றும் குறிப்பிட்டுள்ளளார்.
Leave a comment