மிஹிந்தலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இலுப்புகன்னிய பகுதியில் பெண்ணொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மிஹிந்தலை பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
குறித்த சம்பவம் நேற்று (30) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அப்பெண் தங்கியிருந்த வீட்டிற்கு அருகில் உள்ள காணி ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இல்லுகன்னியா வடக்கு பகுதியை சேர்ந்த 24 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணின் பிரேத பரிசோதனையில் அவரது தலையில் பலத்த காயங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.எனவே, குறித்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மிஹிந்தலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
#SriLankaNews