களுபோவில வைத்தியசாலை வீதியிலுள்ள வீடொன்றுக்கு அருகில் 10 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் வைத்திருந்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்படும் போது சந்தேகநபரிடமிருந்து 1 கிலோ 064 கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது.
இவற்றில் பெரும்பாலானவை அசங்கவிற்கு சொந்தமான போதைப்பொருள் என STF தெரிவித்துள்ளது.
சந்தேகநபர் போதைப்பொருள் கடத்தலுக்காக கொண்டு செல்லப்படுவதாக கிடைத்த தகவலுக்கு அமைய, நேற்று (7) பிற்பகல் அவரது வீட்டிற்கு அருகில் வைத்து விசேட அதிரடிப்படையின் புலனாய்வு அதிகாரிகள் குழு கைது செய்துள்ளது.
சந்தேகநபர் 40 வயதுடைய பெண் எனவும் அவரது கணவர் மீதும் போதைப்பொருள் குற்றச்சாட்டில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.
#SrilankaNews