யாழ்ப்பாணம், புன்னாலைக்கட்டுவன் தெற்கு பகுதியில் அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட மோதலில் அவரை கத்தியால் குத்திய பெண்ணொருவரை சுன்னாகம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட நபருக்கும் குறித்த பெண்ணுக்கும் இடையே நீண்டகாலமாகத் தகராறு இருந்து வந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் இருவருக்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்தது.
இதன்போது, குறித்த பெண் அந்த நபரின் நெஞ்சுப் பகுதியில் கத்தியால் குத்தியுள்ளார்.கத்திக்குத்துக்கு இலக்காகி படுகாயமடைந்த நபர், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுத் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
சம்பவத்தின் பின்னர் தலைமறைவாகியிருந்த சந்தேக நபரான பெண்ணை, சுன்னாகம் பொலிஸார் நேற்றைய தினம் (31) தேடிக் கண்டுபிடித்துக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட பெண்ணிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார், அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.