ஆளுங்கட்சியின் கூட்டத்தைப் புறக்கணித்து விமல், கம்மன்பில அதிரடி

விமல் கம்மன்பில

அமைச்சரவையிலிருந்து அண்மையில் வெளியேற்றப்பட்டிருந்த விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் ஆளுங்கட்சி நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தைப் புறக்கணித்துள்ளனர்.

ஆளுங்கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெற்றது.

இதில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் சிலர் பங்கேற்றாலும், விமல் வீரவன்சவின் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான அறுவர் பங்கேற்கவில்லை. உதய கம்மன்பிலவும் கூட்டத்தைப் புறக்கணித்திருந்தார்.

#SriLankaNews

Exit mobile version