இலங்கை அணியின் அதிரடி ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அவிஷ்க பெர்ணான்டோவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக எதிர்வரும் 16ம் திகதி ஆரம்பமாகவுள்ள சிம்பாப்வே அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் விளையாடும் வாய்ப்பை அவிஷ்க பெர்ணான்டோ இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிம்பாப்வே தொடருக்காக உயிர்க்குமிழி முறைமையின் கீழ் இலங்கை அணிக்கான வீரர்களை உள்வாங்கும் போது முன்னெடுக்கப்பட்ட PCR பரிசோதனையின் போதே அவர் கொரோனா தொற்றுக்குள்ளானமை உறுதியானதாக தெரிவிக்கப்படுகிறறது.
#Sports