உள்ளாட்சிசபைகளின் பதவிக்காலத்தை நீடிப்பது தொடர்பில் அரசு இன்னும் எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை என்று அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.
அமைச்சரவை முவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.
இதன்போது உள்ளாட்சிசபைகளின் பதவி காலம் எதிர்வரும் பெப்ரவரி மாதத்துடன் நிறைவடைகின்றது. எனவே, அவற்றின் பதவி காலம் நீடிக்கப்படுமா அல்லது தேர்தல் நடத்தப்படுமா என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
இது விடயத்தில் அரசின் நிலைப்பாடு என்னவென்பதை பெப்ரவரி மாதம் அறியலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
#SriLankaNews