எதிர்ப்புப் போராட்டங்கள் டொலர்களை ஈட்டுவதில்லை என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மீளத் திறக்கக் கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் தொடர்பாக இன்று (18) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நாட்டின் வெளிநாட்டு கையிருப்பைப் பாதுகாப்பதற்காகவே கச்சா எண்ணெய் இறக்குமதியை இலங்கை நிறுத்தியதாகத் தெரிவித்தார்.
கச்சா எண்ணெய் இறக்குமதியை ஆரம்பித்து எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகளை மீண்டும் தொடங்குவது அவசியம் என தானும் கருதுவதாகவும், எனினும் போராட்டங்கள் டொலர்களை ஈட்டித் தருவதில்லை என்ற கசப்பான உண்மையை தொழிற்சங்கங்கள் புரிந்து கொள்ளவில்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
#SrilankaNews
Leave a comment