ஜே.வி.பி – சுதந்திரக்கட்சி கூட்டணி உருவாகுமா?

155815508a5b210b9af83c492ed00598 XL

” ஜே.வி.பியும் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் கூட்டணி அமைப்பது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர வெளியிட்ட அறிவிப்பானது அவரின் தனிப்பட்ட கருத்தாகும். இது கட்சியின் நிலைப்பாடு அல்ல.” என்று இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்தார்.

தூய்மையான அரசியல் கட்சிகளான ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும், ஜே.வி.பியும் கூட்டணி அமைக்கலாம் என சு.கவின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர கருத்து வெளியிட்டிருந்தார்.

இது   தொடர்பில் பதிலளிக்கையிலேயே சு.கவின் மற்றுமொரு உறுப்பினரான லசந்த அழகியவன்ன இவ்வாறு கூறியுள்ளார்.

அதேவேளை, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் கூட்டணி அமைப்பதற்கு தாம் தயாரில்லை என ஜே.வி.பி. அறிவித்துள்ளது.

எனினும், அக்கட்சிக்கு ஆதரவு வழங்கும் மக்கள் தம்முடன் இணையலாம் என அக்கட்சி அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

#SrilankaNews

 

Exit mobile version