நாட்டில் டொலர் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அதற்கு தீர்வு காணும்முகமாக சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதா அல்லது மாற்று வழிகள் காணப்படுகின்றனவா என்பது தொடர்பில் இன்றையதினம் முடிவு எடுக்கப்படவுள்ளது.
இன்றையதினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் இவ் விடயம் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்படவுள்ளது.
இந்தநிலையில், மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல ஆகியோரும் குறித்த கூட்டத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
#SriLankaNews