ஊரடங்கு நீடிக்குமா? – மருத்துவ சங்கம் கோரிக்கை

0101010 4

ஊரடங்கு நீடிக்குமா? – மருத்துவ சங்கம் கோரிக்கை

நாட்டில் தற்போது விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு நடைமுறைகளை எதிர்வரும் 2 ஆம் திகதி வரை நீடிக்குமாறு இலங்கை மருத்துவ சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இலங்கை மருத்துவ சங்கத்தின் உறுப்பினர்கள், இடைநிலை மருத்துவ கல்லூரி குழுவின் உறுப்பினர்கள் மற்றும் விடயத்துடன் தொடர்புடைய விசேட வைத்திய நிபுணர்கள் ஆகியோரை உள்ளடக்கிய குழுவின் அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள முடக்கத்தில் காணப்படும் தளர்வு நிலைமையால் பிரதிபலனைப் பெற முடியாமல் போகும்.

தற்போதுள்ளதைப் போன்ற நிலைமையிலேனும் போக்குவரத்துக்களை கட்டுப்படுத்துவதன் மூலம் உயிர்களைக் காப்பற்ற முடியும்.

அமுலில் உள்ள முடக்கத்தை இம் மாதம் 18 ஆம் திகதி வரையும் அதன் பின்னர் ஒக்டோபர் 2 ஆம் திகதி வரையும் நீடிக்க வேண்டும்.

அத்துடன் 60 வயதுக்கு மேற்பட்டோர், 18 – 60 வயதுக்கு இடைப்பட்ட நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூன்றாம் கட்டமாக தடுப்பூசிகளில் ஏதேனுமொன்றை வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version