உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துக்கு நீதி கோரி முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களை, நீதி கிடைக்கும்வரை கைவிடப்போவதில்லை – என்று பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளைக்கூட ஆட்சியாளர்கள் நடைமுறைப்படுத்தவில்லை. பொறுப்பை நிறைவேற்றத் தவறியவர்களுக்கு இன்னும் தண்டனை வழங்கப்படவில்லை. ஏன் இவ்வாறு பின்னடிக்கின்றனர் என்பதும் புரியவில்லை.
எமக்கு எது நடந்தாலும் பரவாயில்லை. மக்களுடன் வீதிக்கு இறங்கியாவது நீதியை பெற்றுக்கொடுக்க போராடுவோம்.”- என்றார் பேராயர்.
@SriLankaNews