எரிவாயு ஏன் தானாக வெடிக்கிறது, இது யாரோ பின்னால் இருந்து வெடிக்க வைப்பதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,
கேஸ் வெடிப்பு பற்றி விசாரணை நடத்த ஆரம்பத்திலே கோரிக்கை விடுத்தேன். இந்த எரிவாயு தன்னிச்சையாக வெடிக்கிறது என்பதை நான் ஏற்கவில்லை. ஆனால் இது கவனிக்க வேண்டிய ஒன்று. இதைப் பற்றி விசாரணை நடத்த கோரிக்கை விடுத்த போது எங்களில் சிலர் சிரித்தார்கள்.
இந்த எரிவாயு வெடிப்பைப் பற்றி நான் விசாரணை நடத்த வேண்டும், நிச்சயமாக இந்த குழுவைப் பற்றி கண்டுபிடிக்க வேண்டும். தேவாலயத்தில் குண்டு வைத்து போன்று நாட்டின் தேசிய பாதுகாப்பை குழப்ப முயல்வது குறித்து கண்டறியுமாறு நான் ஜனாதிபதியிடம் கோருகின்றேன் – என்றார்.
#SriLankaNews