அரிசியின் விலைகள் அதிகரிக்கப்படுகிறதா..?

Rice

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை அரசாங்கம் நிர்ணயிக்க வேண்டுமென இலங்கை அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

எதிர்வரும் காலங்களில் ஒரு கிலோகிராம் அரிசியின் விலை 25 ரூபாவால் அதிகரிக்கக்கூடும் என்பதால் இக்கோரிக்கையை இலங்கை அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் விடுத்துள்ளது.

தற்போது, அனைத்து விதமான அரிசி வகைகளும் 100 ரூபாவுக்கும் அதிகமான விலையில் விற்பனையாகிறது.

இந்நிலையில், அரிசி விலை மேலும் அதிகரிக்க கூடும் என்றும் இது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமெனவும் இலங்கை அரிசி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சுராஜ் ஜயவிக்ரம, தெரிவித்துள்ளார்.

#SrilankaNews

Exit mobile version