வெலிக்கடை சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரம் தொடர்பான வழக்கு விசாரணையில் நேற்று மரண தண்டனை விதிக்கப்பட்ட சிறைச்சாலைகள் முன்னாள் ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவா சிறைச்சாலைகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கைதிகளால் அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என்பதால், அவரை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறை அதிகாரிகளின் விசேட பாதுகாப்பின் கீழ், எமில் ரஞ்சன் லமாஹேவா சிறைச்சாலைகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வெலிக்கடை சிறைச்சாலையில் 2012 ஆம் ஆண்டு இடம்பெற்ற கலவரத்தின் 8 கைதிகள் கொல்லப்பட்ட வழக்கில் சிறைச்சாலைகள் முன்னாள் ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவாவிற்கு நேற்று (12) மரண தண்டனை விதிக்கப்பட்டது.
#SriLankaNews