பணம் அச்சடித்தமையாலேயே தப்பி பிழைத்தோம்! – மத்திய வங்கி ஆளுநர் பெருமிதம்

ajith 1

கடந்த வருடம் பணம் அச்சிடப்பட்டமையாலேயே நாடு நெருக்கடியிலிருந்து தப்பிப்பிழைத்தது என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் .தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் மத்திய வங்கியின் பொருளாதார ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் அனில் பெரேரா ஆகியோர் கலந்துகொண்ட நிலையில், மத்திய வாங்கி ஆளுநர் மேற்படி தெரிவித்துள்ளார்.

அவர் ,மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 2021ஆம் ஆண்டில் மாத்திரம் இலங்கை மத்திய வங்கி 1.4 டிரில்லியன் ரூபாவை அச்சிட்டுள்ளது.

வரலாற்றில் ஒருபோதும் இவ்வளவு பெரிய தொகை அச்சிடப்பட்டதில்லை. ஆனாலும் இந்த தொகை பணத்தை அச்சடித்ததன் மூலமே நாடு எதிர்கொள்ளவிருந்த நெருக்கடியை சமாளிக்க முடிந்தது – என்றார்.

#SriLankaNews

Exit mobile version