நிரந்தரமானதொரு அரசியல் தீர்வுக்கு நாம் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்! – சி.வி விக்னேஸ்வரன்

CV Vigneshwaran 67897898

” வருவேன் என்று சொன்ன மாவை கடைசியில் வரவில்லை. ஏன் வரவில்லை என்பதற்கான காரணத்தை அவரிடம்தான் கேட்க வேண்டும்.” – என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும், ஓய்வுபெற்ற நீதியரசருமான சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

தமிழ் பேசும் கட்சிகளின் முக்கிய கூட்டமொன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சார்பில் எவரும் கலந்துகொள்ளவில்லை.

இது தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு கூறினார்.

” கூட்டத்தில் பங்கேற்பதாக மாவை கூறினார். ஆனால் வரவில்லை. அதற்கான காரணத்தை அவரிடம்தான் கேட்க வேண்டும். அவர் எம்முடன் சேர்ந்தால் நல்லது.13 இற்காக மட்டுமல்ல நிரந்தரமானதொரு அரசியல் தீர்வுக்கும் நாம் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.” என்றார் விக்கி.

#SriLankaNews

Exit mobile version