சமஷ்டி அடிப்படையிலான தீர்வுத் திட்டத்துக்கு அரசு ஒருபோதும் உடன்படாது என்று சபை முதல்வரும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
அத்துடன் 13வது திருத்தச் சட்டம் தொடர்பில் இந்தியா மற்றும் அமெரிக்காவுடன் பேச்சு நடத்தும் தமிழ் கட்சிகள் அரசாங்கத்துடன் ஏன் பேசுவதில்லை எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த இந்திய தலையீட்டை கோரி தமிழ் தேசிய கட்சிகள் இந்திய பிரதமருக்கு அனுப்ப உள்ள ஆவணம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” வரலாறு முழுவதும் வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல் கட்சிகள் இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொண்டுவந்தன. அதாவது இந்தியாவுடனும் அமெரிக்காவுடனும் இந்த விடயங்கள் குறித்து பேசுகின்ற தமிழ்க் கட்சிகளுக்கு ஏன் ஏன் இலங்கையில் இருக்கின்ற நாடாளுமன்ற மற்றும் அரசாங்கத்துடன் பேச்சு நடத்த முடியாது என்பதே எமது கேள்வியாக இருக்கின்றது.
தற்போது அரசியல் அமைப்பை உருவாக்குவதற்கு ஒரு நிபுணர் குழு நியமிக்கப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறித்த அறிக்கைக்காக நாம் காத்திருக்கின்றோம். அரசியல் இருப்புக்காகவே தமிழக்கட்சிகள் இவ்வாறு செயற்படுகின்றன.” – என்றார்.
#SriLankaNews