இலங்கையை வந்தடைந்த போர்க்கப்பல்கள்!-

warship

கென்ட் என்ற போர் கப்பல் கொழும்புத் துறைமுகத்தை இன்று (24) வந்தடைந்துள்ளது.

133 மீற்றர் நீளமும், 16 மீற்றர் அகலமும் கொண்ட பிரித்தானியக் கடற்படைக்குச் சொந்தமான இப்போர்க் கப்பல் பங்களாதேஷில் இருந்து கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்தியாவின் கடற்படைக்கு சொந்தமான 02 போர்க் கப்பல்களும் இன்று (24) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. ஷாதுல் மற்றும் மாகர் என்ற குறித்த போர்க் கப்பல்கள், கொழும்பு துறைமுகத்தில் சில தினங்களுக்கு நங்கூரமிடப்படவுள்ளன.

இந்தக் கப்பல்கள், இலங்கை கடற்படையுடன் பயிற்சி நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக, கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

#SrilankaNews

Exit mobile version