பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பாணை!!

gavel

மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி  இன்று (02) அழைப்பாணை வௌியிட்டுள்ளார்.

அசாத் சாலிக்கு எதிராக முறைப்பாடு செய்திருந்த பாராளுமன்ற உறுப்பினர்களான மொஹமட் முஸம்மில், நிமல் பியதிஸ்ஸ மற்றும் ஜயனந்த வெல்லபட ஆகியோருக்கு எதிராக இந்த அழைப்பாணை வௌியிடப்பட்டுள்ளது.

அசாத் சாலிக்கு  எதிராக கேடுவிளைவிக்கும் முறைப்பாட்டொன்றை தாக்கல் செய்துள்ளதாகவும் அதன்படி, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 17 (2)வது சரத்தின் கீழ் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என நீதிமன்றில் கோரிக்கை விடுக்கப்பட்டதன் அடிப்படையில் அழைப்பாணை வழங்கபப்ட்டுள்ளது.

குறித்த முறைப்பாடு பெப்ரவரி 21ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு உத்தரவிட்ட மேல் நீதிமன்ற நீதிபதி, மன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை வௌியிட்டுள்ளார்

#SriLankaNews

Exit mobile version