அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோருக்கும், பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையில் நடைபெறவிருந்த பேச்சு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேற்படி சந்திப்பு நேற்றிரவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. எனினும், இறுதி நேரத்தில் சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளது.
அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவும் இச்சந்திப்பில் பங்கேற்கவிருந்தார்.
விமல், கம்மன்பில ஆகியோர் அமைச்சு பதவிகளில் இருந்து நீக்கப்பட்டனர். வாசு தேவ நாணயக்கார நீக்கப்படாவிட்டாலும் , அமைச்சு பதவியை முன்னெடுக்கப்பபோவதில்லை என அவர் அறிவித்துள்ளார்.
#SriLankaNews