” அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டமை பெரும் அநீதியாகும்.” – என்று அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அத்துடன், தான் வகிக்கும் அமைச்சு பதவி தொடர்பில் கட்சியின் செயற்குழு தீர்மானமொன்றை எடுக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
விமல், கம்மன்பில ஆகியோரின் கூட்டணியில் வாசுவும் இடம்பெற்றிருந்தார். எனினும், அவரின் பதவி பறிக்கப்படவில்லை. இது தமது அணியை பிளவுபடுத்தும் செயல் என கம்மன்பில சுட்டிக்காட்டியுள்ளார்.
#SriLankaNews