கரூர் விவகாரத்தில் சமூக வலைதளங்களில் நீதிபதியை விமர்சிப்பது துரதிஷ்டவசமானது என பாஜகவின் முன்னாள் தமிழக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், “கரூர் விவகாரத்தில் சமூக வலைதளங்களில் நீதிபதியை விமர்சிப்பது துரதிஷ்டவசமானது. நீதிபதி குறித்து நாங்கள் எப்போதும் குறை கூற மாட்டோம்.
தமிழகத்தில் மட்டும்தான் மத்திய அரசை எதிரியாக கருதுகிறார்கள். ஆரோக்கியமாக எந்த விடயத்தையும் பேசாமல் அனைத்தையும் மத்திய அரசு மீது விமர்சிக்கின்றனர்.
ஒரு ஆளுநரை முதல்வர் தொடர்ந்து சீண்டி கொண்டிருப்பது சரியல்ல. கரூர் வழக்கில் தவெக தலைவர் விஜய்யை முதல் குற்றவாளியாக இணைத்தால் வழக்கு நிற்காது.
ஹைதராபாத் அல்லு அர்ஜுனா வழக்கில் அப்படித்தான் நடந்தது. தவெக மீது சில தவறுகள் இருக்கின்றன. அதற்காக விஜய்யை குற்றவாளியாக மாற்ற வேண்டும் என நினைத்தால் அது முடியாது” என திட்டவட்டமாக கூறியுள்ளார்.0