கண்டியில் எரிவாயு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணின் கணவர் , சமையல் எரிவாயு நிறுவனத்திற்கு எதிராக நட்டஈடு கோரி வழக்கு தொடர தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சமையல் எரிவாயுடன் தொடர்புடைய வெடிப்பு சம்பவத்தில் 51 வயதுடைய பெண் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் உயிரிழந்தார்.
மாத்தளை பகுதியைச் சேர்ந்த குறித்த பெண், பிள்ளைகளின் மேலதிக கற்றல் செயற்பாடுகளுக்காக குண்டசாலை பகுதியில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்த நிலையில் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் அரசாங்கமோ, அதனுடன் தொடர்புடைய பொறுப்பு வாய்ந்த நிறுவனமோ எந்தவொரு ஆய்வினையும் இதுவரை நடத்தவில்லையென பெண்ணின் கணவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
#srilankaNews